ஈரானின் அணுசக்தி பயன்பாடு குறித்து பேச்சுவார்த்தை: முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
ஈரானின் அணுசக்தி பயன்பாடு குறித்து பேச்சுவார்த்தை: முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்

ஈரானின் அணுசக்தி பயன்பாடு குறித்த இறுதி ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தை ஜெனிவாவில் நடந்தது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, ஈரான் வெளியுறவு அமைச்சர் ஜாவேத் ஷரீஃப் ஆகியோர் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐநா பாதுகாப்பு அவையின் நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் ஜெர்மனி உடனான இந்தப் பேச்சுவார்த்தை சரியான திசையில் செல்வதாகவும், விரைவில் உடன்பாடு எட்டப்படும் என்று சீனா தரப்பில் பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் வாங் குயின் குறிப்பிட்டுள்ளார். ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதாக மேற்கத்திய நாடுகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்கு மட்டுமே அணுசக்தியை பயன்படுத்தி வருவதாக அந்நாடு மறுத்து வருகிறது.

மூலக்கதை