சிகாகோவில் நடைபெறவிற்குக்கும் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் உலகத் தமிழர்கள் எப்படி கலந்துகொள்வது?

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
சிகாகோவில் நடைபெறவிற்குக்கும் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் உலகத் தமிழர்கள் எப்படி கலந்துகொள்வது?

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கலந்துகொள்ள நுழைவுக்கட்டணம் மற்றும் தங்குமிடம் உள்ளிட்ட தகவல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி 1050 வெள்ளிகள் (Package 1) நன்கொடையளிப்பவர் இரண்டு பேருக்கு நுழைவுச்சீட்டு,உணவு மற்றும் ஐந்து நாட்கள் தங்குமிடம் வழங்கப்படும், 850 வெள்ளிகள் (Package 2) நன்கொடையளிப்பவர் ஒரு நபருக்கு நுழைவுச்சீட்டு,உணவு மற்றும் ஐந்து நாட்கள் தங்குமிடம் வழங்கப்படும். 550 (Package 3)வெள்ளிகள் நன்கொடையளிப்பவர் ஒரு நபருக்கு நுழைவுச்சீட்டு,உணவு மற்றும் மூன்று நாட்கள் தங்குமிடமும் வழங்கப்படும். 200 (Package 4) வெள்ளிகள் நன்கொடையளிப்பவர் ஒரு நபருக்கு நுழைவுச்சீட்டு மட்டும் வழங்கப்படும் என்று உலகத்தமிழாராய்ச்சி குழு தெரிவித்துள்ளது.

அதிகப்படியான விடுதி அறைகள் ஒவ்வொன்றுக்கும்(ஓர் இரவு) 125 வெள்ளிகள் என்றும் நுழைவு மற்றும் உணவுக்கு அதிகப்படியாக மேலும் இருவருக்கு 200 வெள்ளிகள் என்றும் தெரிவித்துள்ளனர். இதற்கான முழுமையான தகவல்களுக்கும், பதிவுக்கும் www.fetnaconvention.org இணையதளத்தை பார்க்கவும்.

மூலக்கதை