தமிழகத்தில் 'ஸ்மார்ட்' லைசென்ஸ்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

தமிழகம் முழுவதும், ஸ்மார்ட் லைசென்ஸ் வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வருகிறது.

போலி லைசென்ஸ்களை தடுக்கும் வகையில், கியூ.ஆர். கோடு வசதியுடன் மைக்ரோ சிப் பொருத்தப்பட்ட ஸ்மார்ட் லைசென்ஸ் வழங்குவதை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

சென்னை திருவான்மியூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் இந்த திட்டத்தை ஜன. 22ல் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து ஆர்.டி.ஓ. அலுவலகங்களிலும் ஸ்மார்ட் கார்டு வடிவில் லைசென்ஸ் வழங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டது.

விடுபட்டிருந்த ஆரணி செய்யூர் ஆர்.டி.ஓ. அலுவலகங்களிலும்,  இந்த வசதி தொடங்கப்படுகிறது. இதனால் நாட்டில் முதல் முறையாக மாநிலம் முழுவதும் ஸ்மார்ட் லைசென்ஸ் வழங்கும் மாநிலமாக தமிழகம் மாற உள்ளது.

மூலக்கதை