கோவையைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் பற்றிய ஆவண குறும்படத்திற்கு ஆஸ்கார் விருது

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

கோவையைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் பற்றிய 'பீரியட் எண்ட் ஆஃப் சென்டன்ஸ்' என்ற ஆவண குறும்படத்துக்கு ஆஸ்கார் விருது கிடைத்து உள்ளது.

திரைப்பட விருதுகளில் சர்வதேச அளவில் வழங்கப்படும் ஆஸ்கார் விருதுக்கு சினிமாத்துறையினர் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகள் இருக்கும். ஆண்டுதோறும் இந்த விருது விழா உலக திரைப்பட கலைஞர்கள் திரள மிக பிரமாண்டமாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் கடந்த ஆண்டுக்கான சிறந்த கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள டால்பி தியேட்டரில் நடைபெற்றது.

அமெரிக்காவில் வாழும் ஈரானைச் சேர்ந்த பெண் ராக்யா செப்தாக்சி இயக்கிய ஆவண குறும்படம், பீரியட் எண்ட் ஆஃப் சென்டன்ஸ். இந்த படம் மாதவிடாய்க் காலங்களில் இந்திய கிராமங்களில் ஏழைப் பெண்கள் படும் அவலங்களைப் பற்றிச் சொல்கிறது. இத்தகைய பெண்களுக்காகவே மலிவு விலை நாப்கின் தயாரித்து விற்பனை செய்து வருபவர் கோவையைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம். 

இந்த படத்தில் இவரது பணியை பாராட்டிச் சொல்லி இருப்பதுடன் இவர் இந்த ஆவணப் படத்தில் தோன்றிப் பேசும் காட்சிகளும் இடம்பெற்று உள்ளன. சிறந்த ஆவண குறும்படத்துக்கான விருதுக்கு இந்த படம் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இந்த படத்துடன் 4 படங்கள் போட்டியில் இருந்தன. இந்த 4 படங்களையும் பின்னுக்கு தள்ளி பீரியட் எண்ட் ஆஃப் சென்டன்ஸ், சிறந்த ஆவண குறும்படத்துக்கான விருதை தட்டிச் சென்றது.

சிறப்பு விருந்தினர்களாக ஏ.ஆர்.ரஹ்மான், பிரியங்கா சோப்ரா கலந்துகொண்டனர். விழாவில் குறிப்பிட்ட விருதுக்கான பட்டியலை அறிவிக்கும் வாய்ப்பையும் பிரியங்கா பெற்றார்.

மூலக்கதை