இனிமே தான் தரமான ரிஷாப் | பெப்ரவரி 23, 2019

தினமலர்  தினமலர்
இனிமே தான் தரமான ரிஷாப் | பெப்ரவரி 23, 2019

 புதுடில்லி: ‘‘எனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வெளிப்படுத்த நேரம் வந்து விட்டது,’’ என ‘சீனியர்’ தோனிக்கு நட்பு ரீதியில் எச்சரிக்கை கொடுத்துள்ளார் ரிஷாப் பன்ட்.

இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட் 21. டெஸ்டில் நிலையான இடத்தை பிடித்து விட்ட இவர் ‘டுவென்டி–20’, ஒருநாள் அணியில் தோனிக்கு அடுத்த இடத்தில் உள்ளதால், சாதாரண வீரராக மட்டும் களமிறங்குகிறார். 

தோனியை தனது ஆஸ்தான் ‘ஹீரோ’வாக புகழும் ரிஷாப் பன்ட், ஐ.பி.எல்., தொடரில் டில்லி அணிக்காக களமிறங்குகிறார். டில்லி அணியின் ஜெர்சி அணிந்து இவர் வெளியிட்ட ஐ.பி.எல்., வீடியோவில்,‘‘ மகி பாய், உங்களிடம் இருந்து அனைத்தையும் கற்றுக் கொண்டு விட்டேன். இனிமேல் தான் எனது சிறப்பான ஆட்டத்தை பார்க்கப் போறீங்க, ஐ.பி.எல்., தொடரில் சந்திப்போம், நீங்க என்ன சொல்றீங்க,’’ என நகைச்சுவையாக கேட்டுள்ளார். இந்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

மூலக்கதை