சட்டம் அமலுக்கு வந்தது சீட்டுப்பணம் வசூலிக்க தனி நபர்களுக்கு தடை

தினகரன்  தினகரன்
சட்டம் அமலுக்கு வந்தது சீட்டுப்பணம் வசூலிக்க தனி நபர்களுக்கு தடை

புதுடெல்லி: அரசு அங்கீகாரம் அளிக்காத சிட்பண்ட் உட்பட எந்த வகை டிபாசிட் திட்டங்களையும் தனிநபரோ, தனியார் நிறுவனங்களோ நடத்த தடை விதிக்கும் சட்டம் அமலுக்கு வந்தது. மேற்கு வங்கத்தில் சாரதா சிட்பண்ட்  விவகாரம் உட்பட சில சிட்பண்ட், நிதி நிறுவனங்கள் மோசடிகளை தொடர்ந்து பொதுமக்களின் பணத்தை பாதுகாக்க அதிரடியாக மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்தது. கடந்த 6ம் ேததி மத்திய அமைச்சரவை கூடி, எடுத்த முக்கிய முடிவுகளில் இதுவும் ஒன்று. நாடாளுமன்ற நிலைக்குழு சிபாரிசுகளை ஏற்று திருத்தப்பட்ட இந்த சட்ட மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.  முறைப்படுத்தப்படாத டிபாசிட்கள் திட்டங்கள் தடை சட்டம் 2019 என்று இதற்கு பெயர். அமைச்சரவை ஒப்புதல் அளித்த இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்றுமுன்தினம் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து இந்த மசோதா சட்டமாகி அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டத்தின் படி:* எந்த ஒரு தனி நபரும், அமைப்பும், நிறுவனமும் கவர்ச்சி திட்டங்களை அறிவித்து பொது மக்களிடம் இருந்து பணம் வசூலிக்க கூடாது. * தனி நபர் மற்றும் நிறுவனம் ஆரம்பிக்கும் சிட்பண்ட், டிபாசிட் திட்டங்களுக்கு அரசு அங்கீகாரம் முக்கியம். முறைப்படுத்தப்படாத, விதிகளுக்கு உட்படாத தனியார் சிட்பண்ட்களில் மக்கள் சேர தடை விதிக்கப்படுகிறது. * தனி நபர்களிடம் சீட்டு  பணம் கட்டி விட்டு ஏமாறும் பொதுமக்கள் புகார் செய்தால் அந்த நபர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களின் சொத்து பறிமுதல் செய்யும் அளவுக்கு சட்டத்தில் வகை  செய்யப்பட்டுள்ளது. * சட்டவிரோதமாக செயல்படும் சிட்பண்ட்கள், நிதி நிறுவனங்களுக்கு விளம்பர தூதராக செயல்படுவோருக்கும் தண்டனை உண்டு. * கவர்ச்சி திட்டங்களில் சேர பொதுமக்களை சலுகை காட்டி அழைத்தால் அது பற்றி அரசுக்கு  புகார் செய்யலாம். தவறான நிறுவனம் என்று தெரிந்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும். * பொதுமக்களை ஏமாற்றி பணம் வசூலிக்கும் நபர்களிடம் இருந்து குறிப்பிட்ட காலத்துக்குள் பணம் வசூலித்து மக்களிடம் திரும்ப தரப்படும். இதற்காக கடும் நடவடிக்கையை அரசு எடுக்கும். * சட்டவிரோதமாக சிட்பண்ட் நடத்துவோர் மீது உரிய சட்ட  நடவடிக்கை எடுக்கவும், அவர்களுக்கு சிறை தண்டனை, அபராதம்  விதிக்கவும் சட்டத்தில் வழி செய்யப்பட்டுள்ளது.

மூலக்கதை