உலக கோப்பை துப்பாக்கிசுடுதல் தங்கம் வென்றார் அபூர்வி

தினகரன்  தினகரன்
உலக கோப்பை துப்பாக்கிசுடுதல் தங்கம் வென்றார் அபூர்வி

புதுடெல்லி: உலக கோப்பை துப்பாக்கிசுடுதல் தொடரின் மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில், இந்திய வீராங்கனை அபூர்வி சண்டேலா தங்கப் பதக்கம் வென்றார்.டெல்லியில் நடைபெற்று வரும் இந்த தொடரில், மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவு பைனலில் பங்கேற்ற அபூர்வி புதிய உலக சாதனையுடன் 252.9 புள்ளிகள் குவித்து முதலிடம் பிடித்தார். சீனாவின் ரூவோஸு ஸாவோவின்  முந்தைய உலக சாதனையை (252.4) அபூர்வி  முறியடித்தார். அவர் ஏற்கனவே ஒலிம்பிக் வாய்ப்பை  உறுதிசெய்து கொண்டுள்ளார். சீன வீராங்கனைகள் ருவோஸு ஸாவோ (251.8) வெள்ளிப் பதக்கமும், ஹாங் ஸு (230.84) வெண்கலமும் வென்றனர். இருவரும் ஒலிம்பிக் தகுதியையும் உறுதி செய்தனர்.

மூலக்கதை