அதிரடியை வெளிக்காட்டிய ஆப்கானிஸ்தான் படைத்த சாதனை!

PARIS TAMIL  PARIS TAMIL
அதிரடியை வெளிக்காட்டிய ஆப்கானிஸ்தான் படைத்த சாதனை!

அயர்லாந்திற்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டாவது சர்வதேச இருபதுக்கு 20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
 
டெஹ்ராவில் நடைபெறும் அயர்லாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 2-வது T-20 போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
 
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 278 ஓட்டங்களை எடுத்து உலக சாதனை படைத்தது.
 
அவ்வணி சார்பில் ஹஸ்ரதல்லாஹ் சஜாய் அதிரடியாக விளையாடி 62 பந்துகளில் 162 ஓட்டங்களையும், உஸ்மான் ஹாணி 73 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.
 
இதனை அடுத்து 279 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 194 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 84 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
 
அவ்வணி சார்பில் அணித்தலைவர் பவுல் ஸ்டிர்லிங் 91 ஓட்டங்களையும், கெவின் ஓ பிரையன் 37 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். குறித்த போட்டியில் ஆட்டநாயகனாக அதிரடியை வெளிக்காட்டிய அப்கானிஸ்தான் வீரர் ஹஸ்ரதல்லாஹ் சஜாய் தேர்வு செய்யப்பட்டார்.
 
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட T – 20 தொடரை, 2-0 என ஆப்கானிஸ்தான் அணி கைப்பற்றியுள்ளது.
 
மேலும் செய்திகளை

மூலக்கதை