பி.சி.சி.ஐ.,க்கு தடை வருமா * பாக்., போட்டியை புறக்கணித்தால்... | பெப்ரவரி 23, 2019

தினமலர்  தினமலர்
பி.சி.சி.ஐ.,க்கு தடை வருமா * பாக்., போட்டியை புறக்கணித்தால்... | பெப்ரவரி 23, 2019

 புதுடில்லி: பாகிஸ்தானுக்கு எதிரான உலக கோப்பை போட்டியில் இந்திய அணி பங்கேற்க மறுத்தால், பி.சி.சி.ஐ.,க்கு தடை விதிக்கப்படும் அபாயம் இருப்பதாக தெரிகிறது.

காஷ்மீரில் புல்வாமா என்ற இடத்தில் நடந்த தற்கொலைப் படை பயங்கரவாத தாக்குதலில் 409 சி.ஆர்.பி.எப்., ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால் வரும் உலக கோப்பை தொடரில் இந்திய அணி, ஜூன் 16ல் மோதவுள்ள பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை புறக்கணிக்க வேண்டும் என கோரிக்கை வலுவாக எழுந்து வருகிறது. 

இப்போட்டிக்காக இங்கிலாந்தின் மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிரபோர்டு மைதானம் தயாராகி வருகிறது. இங்கு 25,000 பேர் மட்டும் அமர்ந்து பார்க்க முடியும் என்ற நிலையில், இதுவரை 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் டிக்கெட் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். 

இருப்பினும் பாகிஸ்தானுக்கு எதிரான மோதல் குறித்து மத்திய அரசு எந்த முடிவு எடுத்தாலும் கட்டுப்படுவதாக இந்திய கிரிக்கெட் கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தெரிவித்தது. ஒருவேளை இந்திய அணி, உலக கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக பங்கேற்க மறுத்தால், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) பி.சி.சி.ஐ., மீது தடை விதிக்கும் அபாயம் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 

இதுகுறித்து பாகிஸ்தான் தரப்பில் வெளியான செய்தியில்,‘ எங்களை தண்டிக்கும் வகையில் எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டால், பி.சி.சி.ஐ., மீது ஐ.சி.சி., தடை விதிக்கும்,’ என கூறப்பட்டுள்ளது. 

மூலக்கதை