பிற்போடப்படவுள்ள பிரெக்ஸிற்?

PARIS TAMIL  PARIS TAMIL
பிற்போடப்படவுள்ள பிரெக்ஸிற்?

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறுவது பிற்போடப்படுவதற்கான சாத்தியத்தை நிராகரிக்க முடியாதென ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை பிரெக்ஸிற் பேச்சுவார்த்தையாளர் மைக்கேல் பார்னியர் தெரிவித்துள்ளார்.
 
பிரெக்ஸிற் பிற்போடப்படுவதற்கான சாத்தியத்தை தம்மால் நிராகரிக்க முடியாது எனவும் ஆனால் அது குறித்து முடிவெடுப்பது தமது கைகளில் இல்லையெனவும் பார்னியர் தெரிவித்தார்.
 
பிரெக்ஸிற்றை பிற்போடுவது குறித்து முடிவெடுக்க வேண்டியது ஐரோப்பியத் தலைவர்களே ஆனால் பிரெக்ஸிற்றை பிற்போடுவதற்கான காரணத்தை பிரித்தானியா தெளிவுபடுத்த வேண்டியிருக்குமெனவும் அவர் கூறினார்.
 
மேலும் தற்போது எமக்கு மேலதிக நேரம் தேவையில்லை, எமக்கு இப்போது வேண்டியது முடிவுகளே எனவும் பார்னியர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை