உலகின் மிகப் பெரிய தேனீ இந்தோனேசியாவில் கண்டுபிடிப்பு

தினகரன்  தினகரன்
உலகின் மிகப் பெரிய தேனீ இந்தோனேசியாவில் கண்டுபிடிப்பு

ஜகார்த்தா: உலகின் மிகப் பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு இந்தோனேசிய நாட்டில் கண்டறியப்பட்டிருக்கிறது. வட அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் வடக்கு மொலுக்காஸ் தீவில் இதனை கண்டறிந்துள்ளனர்.  இந்தக் குழுவானது பல வருடங்களாக இந்தோனேஷிய காடுகளில் தேனீக்களைக் குறித்து ஆய்வு மேற்கொண்டு வந்த நிலையில், இந்த பெரிய தேனீயைக் கண்டதாக தெரிவித்துள்ளனர். வாலஸ் ஜெயண்ட் என்ற வகைத் தேனீ, உலகிலேயே அளவில் பெரியதாக கூறப்படுகிறது. 1981ஆம் ஆண்டுக்குப் பின், அந்த தேனீ இனமே அழிந்துவிட்டதாக கருதப்பட்டது. கட்டைவிரல் அளவு கொண்ட இந்த தேனீயின், சிறகுகள் இரண்டரை அங்குல நீளம் கொண்டவையாகும். அழிந்துவிட்டதாக கருதப்பட்ட இவ்வகை தேனீ தற்போது இந்தோனேசிய நாட்டில் கண்டறியப்பட்டிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை