91வது ஆஸ்கர் விருது விழா: நாளை நடக்கிறது

தினமலர்  தினமலர்
91வது ஆஸ்கர் விருது விழா: நாளை நடக்கிறது

உலகின் மிக உயரிய திரைப்பட விருது வழங்கும் விழாவான ஆஸ்கர் விருது வழங்கும் விழா நாளை (பிப்.,24) லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் நடக்கிறது. அங்கு பிப்.,24 ம் தேதி மாலை 6.30 மணிக்கு நடக்கும் இந்த விழா, இந்திய நேரப்படி நாளை மறுநாள் (25ந் தேதி) அதிகாலை 6.30 மணிக்கு நடக்கிறது.

இந்த ஆண்டுக்கான போட்டியில் தி பேவரைட், ரோமோ ஆகிய படங்கள் தலா 10 போட்டி பிரிவுகளில் போட்டியிடுகிறது. இதில் தி பேவரிட் வரலாற்று படம், ஒலிவியா கோல்மன் இயக்கி உள்ளார். எம்மா ஸ்டோன், ரேச்சர் வெய்ஸ் நடித்துள்ளனர். எம்மா ஸ்டோன் சிறந்த நடிகைக்கான போட்டியில் இருக்கிறார்.

ரோமா, ஒரு மனிதனின் வாழ்வில் சிறு வயதில் நடந்த ஒரு நிகழ்வு அவன் வாழ்கையை எந்த அளவிற்கு பாதிக்கிறது என்கிற கதை. அல்போன்சா குரோன் இயக்கி உள்ளார். இதற்கு அடுத்தபடியாக வைஸ் என்கிற படம் 8 பிரிவுகளிலும், ஸ்டார் இன் பார்ன் என்ற படம் 8 பிரிவுகளிலும் போட்டியிடுகிறது. கடந்த ஆண்டு வசூலில் சாதனை படைத்த பிளாக் பேந்தர் படம் 7 பிரிவுகளில் போட்டியிடுகிறது.இந்த விழாவில் மொத்தம் 24 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகிறது.

கோவை இளைஞர் முருகானந்தம் இயக்கிய பீரியட் எண்ட் ஆப் சென்டன்ஸ் என்ற படம் குறும்பட பிரிவில் போட்டியிடுகிறது. பெண்கள் மாதவிடாய் காலத்தில் படும் அவஸ்தைகளை சொல்லும் படம் இது.

மூலக்கதை