தமிழில் அனு சித்தாரா

தினமலர்  தினமலர்
தமிழில் அனு சித்தாரா

20க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களில் நடித்திருப்பவர் அனு சித்தாரா. அறிமுகமான புதிதில் வெறி என்ற தமிழ் படத்தில் அறிமுகமாகி நடித்தார். இந்தப் படம் வெளிவரவில்லை. இப்போது 4 வருடங்களுக்கு பிறகு தமிழுக்கு வருகிறார்.

தம்பி திரைக்களம் மற்றும் ஸ்டுடியோ 9 நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் அமீரா என்ற படத்தில் நடிக்கிறார். சீமான் மற்றும் ஆர்கே சுரேஷ் இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள். இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு ,கூத்துப்பட்டறை ஜெயக்குமார், வினோதினி மற்றும் பலர் நடிக்கிறார்கள். சீமானிடம் உதவியாளராக பணியாற்றிய ரா.சுப்ரமணியன் என்பவர் இயக்குகிறார்.

சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் பல சர்வதேச விருதுகளை குவித்த டூலெட் படத்தின் இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான செழியன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். இது ஒரு இஸ்லாமிய பெண்ணை மையப்படுத்திய கதை. ஆதிரா என்ற டைட்டில் ரோலில் அனு சித்தாரா நடிக்கிறார். இதன் படப்பிடிப்புகள் நேற்று தொடங்கியது.

மூலக்கதை