உண்மை சம்பவத்தில் விக்ரம் பிரபு

தினமலர்  தினமலர்
உண்மை சம்பவத்தில் விக்ரம் பிரபு

துப்பாக்கி முனை படத்திற்கு பிறகு விக்ரம் பிரபு அசுரகுரு மற்றும் வால்ட்டர் படங்களில் நடித்து வருகிறார். இதற்கு அடுத்த படமாக வெற்றிமாறன் உதவியாளர் தமிழரசன் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதனை மாயா, மாநகரம் படங்களை தயாரித்த பொட்டன்ஷியல் நிறுவனம் தயாரிக்கிறது. தற்போது இந்த நிறுவனம் எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் மான்ஸ்டர் படத்தை தயாரித்து வருகிறது.

மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்கிறார். மற்ற நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் தமிழ்நாட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறவுள்ளது. இது சமீபத்தில் தமிழ்நாட்டில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையாக கொண்டு உருவாகும் படம்.

மூலக்கதை