அடுத்த மாதம் தனுஷின் புதிய படம் ஆரம்பம்

தினமலர்  தினமலர்
அடுத்த மாதம் தனுஷின் புதிய படம் ஆரம்பம்

வடசென்னையைத் தொடர்ந்து மீண்டும் வெற்றிமாறன் இயக்கும் அசுரன் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடிக்கிறார். அவர்களுடன் வடிவேலு, யோகிபாபு ஆகியோரும் நடிக்கும் இந்த படத்தில் விஜயசேதுபதி நட்புக்காக நடிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டி யிருப்பதாக சொல்கிறார்கள். அதனால் மார்ச் மாதம் முதல் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் தொடங்கப்பட உள்ளதாம். இந்த படத்தை அஜீத்தின் விஸ்வாசம் படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இதற்கு முன்பு தனுஷ் நடித்த கொடி படத்தை இயக்கிய துரை செந்தில்குமார், சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச் சல், காக்கி சட்டை ஆகிய படங்களையும் இயக்கியிருக்கிறார்.

மூலக்கதை