சமந்தாவின் கேரியரில் சவாலாக அமைந்த முதல் படம்

தினமலர்  தினமலர்
சமந்தாவின் கேரியரில் சவாலாக அமைந்த முதல் படம்

பாணா காத்தாடியில் அறிமுகமான சமந்தா, குறுகிய காலத்தில் தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையானார். அனைத்து மேல்தட்டு நடிகர்களுட னும் நடித்து ஒரு பெரிய ரவுண்டு வந்து கொண்டிருந்தபோது தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் திருமணத்திற்கு பிறகும் கலைச்சேவையைத் தொடர்ந்து வரும் சமந்தாவிற்கு அதன்பிறகு வெளியான ரங்கஸ்தலம், இரும்புத்திரை, மகாநதி போன்ற படங்களும் அடுத்தடுத்து ஹிட் கொடுத் தன. தற்போது மஜிலி, ஓ பேபி சக்ககுன்னவே ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அவர் ஆரண்ய காண்டம் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் நடித்துள்ள சூப்பர் டீலக்ஸ் மார்ச் 29-ந்தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தில் விஜயசேதுபதி, பகத்பாசிலுடன் இணைந்து வேம்பு என்ற ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் சமந்தா.

இந்த வேடம் குறித்து அவர் கூறுகையில், இதுவரை நான் தென்னிந்திய மொழியில் பல மாறுபட்ட வேடங்களில் நடித்திருக்கிறேன். அதில் எனக்கு மிகவும் சவாலாக அமைந்த வேடம் என்றால் இந்த சூப்பர் டீலக்ஸ் படத்தில் அமைந்துள்ள வேம்பு கேரக்டர்தான். வித்தியாசமான கதைக்களத்தில் உருவான கேரக்டர் என்பதால் ஒவ்வொரு காட்சிகளையும் டைரக்டரின் ஆலோசனைப்படி ரிகர்சல் எடுத்து நடித்தேன். இந்த வேடம் என்னைப்போலவே எனது ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும் என்று கூறியுள்ளார் சமந்தா.

மூலக்கதை