மீண்டும் தமிழில் பிரியங்கா திரிவேதி

தினமலர்  தினமலர்
மீண்டும் தமிழில் பிரியங்கா திரிவேதி

விஜயகாந்த் நடித்த ராஜ்ஜியம் படத்தில் தமிழுக்கு வந்தவர் பிரியங்கா திரிவேதி. அதன்பிறகு அஜீத்துடன் ராஜா, விக்ரமுடன் காதல் சடுகுடு, அருண் விஜய்யுடன் ஜனனம் ஆகிய படங்களில் நடித்தார். கன்னடம், பெங்காலி, ஹிந்தி படங்களில் அதிகமாக நடித்து வரும் பிரியங்கா திரிவேதி, கன்னட இயக்குனர் உபேந்திராவை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வரும் பிரியங்கா திரிவேதி, தற்போது தமிழில் மகத்-யாஷிகா இணைந்து நடிக்கும் திரில்லர் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படம் தனக்கு நல்லதொரு ரீ-என்ட்ரியாக அமையும் என்று கூறியுள்ள பிரியங்கா திரிவேதி, தொடர்ந்து தமிழில் நல்ல வேடங்களில் நடிப்பதில் ஆர்வமாக இருப்பதாக கூறியுள்ளார்.

மூலக்கதை