இந்தியா - பாகிஸ்தான் இடையே ஆபத்தான சூழ்நிலை: புல்வாமா தாக்குதலை அடுத்து டிரம்ப் பேட்டி

தினகரன்  தினகரன்
இந்தியா  பாகிஸ்தான் இடையே ஆபத்தான சூழ்நிலை: புல்வாமா தாக்குதலை அடுத்து டிரம்ப் பேட்டி

வாஷிங்டன்: இந்தியா - பாகிஸ்தான் இடையே ஆபத்தான சூழ்நிலை நிலவுவதாக புல்வாமா தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேட்டியளித்துள்ளார். ஜம்மு - காஷ்மீர் மாநில புல்வாமா அருகே நடந்த தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.இதனால் தற்போது இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே மிகவும் மோசமான சூழ்நிலை நிலவுவதாகவும், மிகவும் ஆபத்தான சூழ்நிலை நிலவுவதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதனை நிறுத்த தற்போது முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த தீவிரவாத தாக்குதலில் அதிக பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் இதனை நிறுத்த முயற்சி மேற்கொள்வதாகவும், தீவிரவாதத்தை தடுக்கும் முயற்சியில் முழுமையாக ஈடுபட்டுள்ளதாகவும் பேட்டியளித்தார்.இந்த சம்பவத்தில் இந்தியா ஒரு வலுவான காரணத்தை பார்ப்பதாகவும் இந்த தாக்குதலில் இந்தியா கிட்டத்தட்ட 50 பேரை இழந்தது என்றும் அதனை தன்னால் புரிந்து கொள்ள முடிகிறது என்றும் தெரிவித்துள்ளார். எனது நிர்வாகம் இரு நாடுகளிலும் அதிகாரிகளுடன் பேசிக்கொண்டிருந்தது. நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோம், நிறைய பேர் இருக்கிறார்கள், இது மிகவும் மென்மையான சமநிலையை உருவாக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் நடந்த பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிறைய பிரச்சினைகள் உள்ளன என்று ட்ரம்ப் தெரிவித்தார்.பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.7,100 கோடி நிதியுதவியை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. பாகிஸ்தானுடன் ஆலோசனை கூட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் நல்ல உறவு இருந்தது எனவும் தெரிவித்துள்ளார்.இந்தியா அத்துமீறி தாக்குதல் நடத்தினால் அதற்கு பாகிஸ்தான் ராணுவம் சரியான பதிலடியை கொடுக்கும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலும் புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை