பாக்ஸ் ஆபீஸ் வசூலில் ரஜினி படங்கள் டாப்

தினமலர்  தினமலர்
பாக்ஸ் ஆபீஸ் வசூலில் ரஜினி படங்கள் டாப்

டாப் டென் பாக்ஸ் ஆபீஸ் என சொல்லப்படும் வசூல் சாதனையில், நடிகர் அஜித்தின் விஸ்வாசம் படம் 184 கோடி ரூபாயைக் குவித்து 8வது இடத்தில் உள்ளது. ஆனால், நடிகர் ரஜினி நடிப்பில் உருவான 2.0 படம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் குறைந்தது ஒரு படம் ரிலீசாகிறது. பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு ஆகிய தினங்களில் மாஸ் ஹீரோக்களின் படங்கள் போட்டி போட்டுக் கொண்டு திரைக்கு வருகின்றன. அப்படியே திரைக்கு வரும் படங்கள் எல்லாமே, பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டாகி வசூல் குவிப்பதில்லை. மாறாக, ஒரு சில படங்கள் மட்டுமே பாக்ஸ் ஆபிஸ் வசூலில் மாஸ் காட்டும் படங்களாக அமைகின்றன. அந்த வகையில், கடந்த 2015ம் ஆண்டு முதல் திரைக்கு வந்த மாஸ் ஹீரோக்களின் படங்களில், எந்தெந்த படங்கள் அதிக வசூல் குவித்து டாப் 10 பாக்ஸ் ஆபிஸில் எந்த இடத்தில் இருக்கிறது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய் குமார், எமி ஜாக்சன் ஆகியோரது நப்பில், கடந்த ஆண்டு நவம்பர் 2ல் வெளியான படம் 2.0. அறிவியல் பின்னணிக் கதையை மையப்படுத்திய, இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. இந்தப் படம், வசூலில் சாதனை படைத்துள்ளது. 653.4 கோடி ரூபாயை வசூலித்து, டாப் 10 பாக்ஸ் ஆபீஸ் வசூலில் முதலிடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தைத் தொடர்ந்து இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, அட்டகத்தி தினேஷ் ஆகியோர் பலர் நடிப்பில், கடந்த 2016 ஜூலை 22ல் வெளியான படம் கபாலி படம் டாப் 10 பாக்ஸ் ஆபீஸ் வசூலில், 304 கோடி ரூபாய் வசூல் குவித்து 2ஆவது இடம் பிடித்துள்ளது.

இதே போன்று, ரஜினியின் எந்திரன் படம் 283 கோடி ரூபாய் வசூல் குவித்து 3 வது இடம் பிடித்துள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து அண்மையில் வெளியான மாஸ் படம் பேட்ட 223 கோடி ரூபாய் வரையில் வசூல் குவித்து 7வது இடம் பிடித்துள்ளது.

இதைத் தொடர்ந்து, இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வந்த, காலா படம் 158.7 கோடி ரூபாய் வசூல் குவித்து 9வது இடத்தில் உள்ளது. அட்லி, நடிகர் விஜய் கூட்டணியில் கடந்த 2017ல் வெளியான மெர்சல் படம் 248.3 கோடி வரையில் வசூல் குவித்து, 4வது இடம் பிடித்துள்ளது.

இப்படத்தைத் தொடர்ந்து, கடந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திரைக்கு வந்த சர்க்கார் படம் 243.9 கோடி ரூபாய் வரையில் வசூல் குவித்து 5வது இடம் பிடித்துள்ளது. இதே போன்று, விஜய்யின் தெறி படம் 150.9 கோடி ரூபாய் வசூல் கொடுத்து 10வது இடத்தில் உள்ளது.

கடந்த 2015 ஜனவரி 14ல் விக்ரம் நடிப்பில் வந்த ஐ படம் 227 கோடி ரூபாய் வசூல் குவித்து, 6வது இடத்தில் உள்ளது. இதே போன்று, அஜித் நடிப்பில் இந்தாண்டு வெளியான விஸ்வாசம் படம் இன்னமும் வசூல் குவித்து வரும் நிலையில், உலக பாக்ஸ் ஆபீஸ் வசூலில் 184 கோடி வசூல் கொடுத்து, 8வது இடத்தில் உள்ளது. ரஜினியின் 5 படங்கள், விஜய்யின் 3 படங்கள், அஜித்தின் விஸ்வாசம் மற்றும் விக்ரமின் ஐ ஆகிய படங்கள் டாப் 10 பாக்ஸ் ஆபீஸ் வசூல் குவித்த படங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.

மூலக்கதை