அமலாபால் வேடத்தில் நடிக்கும் அனுபமா பரமேஸ்வரன்

தினமலர்  தினமலர்
அமலாபால் வேடத்தில் நடிக்கும் அனுபமா பரமேஸ்வரன்

தமிழில் முண்டாசுப்பட்டி ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்து வெளியான படம் ராட்சசன். இந்த படத்தில் அவருடன் அமலாபால், காளி வெங்கட், முனீஷ்காந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர்.

இந்த படத்தை தற்போது தெலுங்கில் ரைடு என்ற படத்தை இயக்கிய ரமேஷ்வர்மா ரீமேக் செய்கிறார். பெல்லம் கொண்ட ஸ்ரீனிவாஸ் நாயகனாக நடிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார்.

மேலும், ராட்சசன் படத்தில் அமலாபால் நடித்த ஆசிரியை வேடத்தில் நடிக்க சில நடிகைகள் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது கொடி படத்தில் தனுசுடன் நடித்த பிரேமம் அனுபமா பரமேஸ் வரன் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

மூலக்கதை