டெல்லி அரசு பள்ளிகளில் நடத்தப்படும் ஆசிரியர் தேர்வில் எஸ்சி பிரிவினருக்கான கட்ஆஃப் அதிகம் என தகவல்

தினகரன்  தினகரன்
டெல்லி அரசு பள்ளிகளில் நடத்தப்படும் ஆசிரியர் தேர்வில் எஸ்சி பிரிவினருக்கான கட்ஆஃப் அதிகம் என தகவல்

புதுடெல்லி: டெல்லி அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வில், எஸ்சி பிரிவினருக்கான கட்ஆஃப் மதிப்பெண், பொதுப்பிரிவினருக்கான கட்ஆஃப் மதிப்பெண்ணைவிட கூடுதலாக அமைத்துள்ளது. இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான கட்ஆப் மதிப்பெண் வழக்கமாக பொதுப் பிரிவினரைவிட குறைவாகவே இருக்கும். இடஒதுக்கீட்டின் விழுக்காடு, தேர்வை எழுதிய தேர்வர்களின் எண்ணிக்கை, காலிப் பணியிடங்கள் அடிப்படையில் இது அமையும். இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் 222 ஆசிரியர் பணியிடங்களுக்கு டெல்லி கல்வி இயக்குனரகத்தால் கடந்த செப்டம்பர் மாதம் தேர்வு நடத்தப்பட்டது. இதில் 31 இடங்கள் எஸ்சி ஒதுக்கீட்டு இடங்கள் என்ற நிலையில், அப்பிரிவினர் தகுதிபெறுவதற்கான கட்ஆஃப் மதிப்பெண் 85.45 ஆகவும், பொதுப் பிரிவினர் தகுதிபெறுவதற்கான மதிப்பெண் 80.96 ஆகவும் அமைந்துள்ளது. ஓபிசி பிரிவினருக்கு கட்ஆஃப், எஸ்சி பிரிவைவிட 12 மதிப்பெண்கள் குறைவாக அமைந்துள்ளது. மிகக்குறைந்த கட்ஆப் மதிப்பெண்ணாக எஸ்டி பிரிவினருக்கு 69.31 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மூலக்கதை