இரட்டை இலைக்கு லஞ்ச விவகாரம் : டிடிவி.தினகரனிடம் குரல் சோதனை? மார்ச்.20ல் டெல்லி உயர்நீதிமன்றம் விசாரணை

தினகரன்  தினகரன்
இரட்டை இலைக்கு லஞ்ச விவகாரம் : டிடிவி.தினகரனிடம் குரல் சோதனை? மார்ச்.20ல் டெல்லி உயர்நீதிமன்றம் விசாரணை

புதுடெல்லி: இரட்டை இலை சின்னத்தைப் பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு ரூ.50கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக டி.டி.வி.தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா உள்ளிட்டோர் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர் ஹவாலா புரோக்கர் சுகேஷ் சந்திர சேகர் மற்றும் டிடிவி.தினகரன் பேசிய ஆடியோவை டெல்லி குற்றவியல் போலீசார் ஒப்படைத்து அதுகுறித்து விரிவான விசாரணை நடத்த டிடிவி.தினகரனின் குரலை எடுத்து பரிசோதனை செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.ஆனால் இதற்கு டிடிவி.தினகரன் ஒத்துழைப்பு தர மறுத்துவிட்டார்.இதையடுத்து டிடிவி.தினகரன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவை கடந்த 2017ம் ஆண்டும் தாக்கல் செய்திருந்தார். அதில்,” இந்த ஆடியோ கேசட் பொய்; அதேப்போல் இந்த வழக்கானது முற்றிலும் அரசியல் சூழ்ச்சி சார்ந்தது என்பதால் இதுகுறித்து தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கை ஆகியவைக்கு  நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த மேற்கண்ட மனு நேற்று டெல்லி உயர்நீதிமன்றத்தின் நீதிபதி சுனில் கவுர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து டிடிவி.தினகரன் குரல் மாதிரி தொடர்பான வழக்கை மார்ச் 20ம் தேதி விசாரிப்பதாக நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி.தினகரனின் குரல் சோதனை நடத்தப்படுமா? என்பது குறித்து அன்றைய விசாரணையில் தெரியவரும்.

மூலக்கதை