அசாமில் பரிதாபம் கள்ளச் சாராயம் குடித்த 30 தொழிலாளர்கள் பலி

தினகரன்  தினகரன்
அசாமில் பரிதாபம் கள்ளச் சாராயம் குடித்த 30 தொழிலாளர்கள் பலி

கவுகாத்தி: அசாமில் கள்ளச்சாராயம் குடித்த தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் 30 பேர் பரிதாபமாக பலியாகினர்.  அசாம் மாநிலம், கோலாகாட் மாவட்டத்தில் உள்ளது சல்மீரா தேயிலை எஸ்டேட். இங்கு பணியாற்றும் ெதாழிலாளர்கள் பலர் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்தனர். அடுத்த சில மணி நேரங்களில் அவர்களில் பலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனா்ல், சிகிச்சை பலனின்றி  30 பேர் இறந்தனர். இதில், 4 பேர் பெண்கள். மேலும், பல தொழிலாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பலர் ஆபத்தான நிலையில் உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில்,  ஜூகிபாரில் பகுதியில் இயங்கி வந்த கள்ளச்சாராய தொழிற்சாலையின் உரிமையாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூலக்கதை