ஐ.பி.எல்., துவக்க விழா ரத்து | பெப்ரவரி 22, 2019

தினமலர்  தினமலர்
ஐ.பி.எல்., துவக்க விழா ரத்து | பெப்ரவரி 22, 2019

 புதுடில்லி: ஐ.பி.எல்., தொடரில் துவக்க விழா நிகழ்ச்சி ரத்து செய்யப்படுகிறது. இதற்கான தொகையை, பயங்கரவாத தாக்குதலில் மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தர முடிவு செய்யப்பட்டது. 

இந்தியாவில் 12வது ஐ.பி.எல்., ‘டுவென்டி–20’ தொடர் வரும் மார்ச் 23ல் துவங்குகிறது. சென்னையில் நடக்கும் முதல் போட்டியில் ‘நடப்பு சாம்பியன்’, தோனியின் சென்னை, கோஹ்லி கேப்டனாக இருக்கும் பெங்களூருவை சந்திக்க உள்ளது.

இதற்கு முன் பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்கும் துவக்கவிழா பிரமாண்டமாக நடக்கும். இந்த ஆண்டு புல்வாமா பயங்கரவாத தாக்குதல் காரணமாக ஐ.பி.எல்., துவக்க விழா நிகழ்ச்சி ரத்து செய்யப்படுகிறது. 

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் நிர்வாக குழு தலைவர் வினோத் ராய் கூறுகையில்,‘‘ இந்த சீசனில் ஐ.பி.எல்., தொடருக்காக எவ்வித துவக்கவிழா நிகழ்ச்சிகளும் நடத்தப் போவதில்லை. இதற்காக செலவு செய்யப்பட திட்டமிட்ட தொகை, புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு தரப்பட உள்ளது,’’ என்றார்.

மூலக்கதை