9 ரன்னுக்கு சுருண்ட மிஜோரம் * பெண்கள் ‘டுவென்டி–20’ல் வினோதம் | பெப்ரவரி 22, 2019

தினமலர்  தினமலர்
9 ரன்னுக்கு சுருண்ட மிஜோரம் * பெண்கள் ‘டுவென்டி–20’ல் வினோதம் | பெப்ரவரி 22, 2019

 புதுச்சேரி: உள்ளூர் ‘டுவென்டி–20’ போட்டியில் மிஜோரம் பெண்கள் அணி 9 ரன்னுக்கு சுருண்டது. 

இந்தியாவில் பெண்களுக்கான உள்ளூர் ‘டுவென்டி–20’ தொடர் நடக்கிறது. இதில் மிஜோரம், மத்திய பிரதேச அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய மிஜோரம் அணிக்கு கேப்டன் சந்தியா, மிகி என வரிசையாக ‘டக்’ அவுட்டாகினர். 

2 ரன் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஒரு பவுண்டரி உட்பட 6 ரன் எடுத்த அபுர்வாவும் நிலைக்கவில்லை. 9 பேர் ‘டக்’ அவுட்டாகினர். உதிரியாக 3 ரன் கிடைக்க, 13.5 ஓவரில் மிஜோரம் அணி 9 ரன்னுக்கு சுருண்டது. 

அடுத்த ம.பி., அணி களமிறங்கியது. முதல் ஓவரை வீசிய அபுர்வா, 5 ‘வைடுகள்’ வழங்கினார். முடிவில் 1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 10 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பபிதா (3), தரங் (2) அவுட்டாகாமல் இருந்தனர். 

இந்திய பெண்கள் ‘டுவென்டி–20’ல் மோசமாக ஸ்கோர் எடுக்கப்படுவது தொடர்கிறது. சமீபத்தில் கேரள அணிக்கு எதிராக மிஜோரம் அணி 24 ரன்னுக்கு சுருண்டது. தவிர மணிப்பூர் அணி சமீபத்திய போட்டியில் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 19 ரன்கள் மட்டும் எடுத்து சொதப்பியது.

மூலக்கதை