பாக்., கட்டுப்பாட்டில் ஜெய்ஷ் இ முகம்மது தலைமையகம்

தினமலர்  தினமலர்
பாக்., கட்டுப்பாட்டில் ஜெய்ஷ் இ முகம்மது தலைமையகம்

இஸ்லாமாபாத்: ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பின் தலைமையகத்தை, பாகிஸ்தான் அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.

அமைப்புகளுக்கு தடை

இந்நிலையில் மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில், கடந்த 2008 ல் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில், மூளையாக செயல்பட்ட பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதி ஹபீஸ் சயீத் தலைவனாக உள்ள ஜமாத் -உத்-தாவா மற்றும் பலாஹி இன்சானியாத் அறக்கட்டளை ஆகியவற்றுக்கு தடை விதித்து பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் நேற்று(பிப்.,21) உத்தரவு பிறப்பித்துள்ளது.

பாக்., அரசு கட்டுப்பாட்டில்


பாகிஸ்தான் அரசு, அடுத்த கட்ட நடவடிக்கையாக ஜெய்ஷ் இ முகம்மது அலுவலகத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. அந்தஅலுவலகத்தை நிர்வகிக்க அரசு சார்பில் ஒருவரை நியமித்து பாக்., அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

மூலக்கதை