வெளிநாடு ஒன்றில் இலங்கை தமிழ் பெண்ணுக்கு கிடைத்த அதிஷ்டம்!

PARIS TAMIL  PARIS TAMIL
வெளிநாடு ஒன்றில் இலங்கை தமிழ் பெண்ணுக்கு கிடைத்த அதிஷ்டம்!

கடந்த 9 வருடங்களாக அவுஸ்திரேலியாவின் கல்வி நிலையையே மாற்றிய இலங்கை தமிழ் பெண்ணா யசோதை செல்வகுமார் உலகின் மிக சிறந்த ஆசிரியர்களில் ஒருவராக பெயரிடப்பட்டுள்ளார்.

அவரால் அவுஸ்திரேலியா சர்வதேச அரங்கில் அங்கீகாரம் பெற்றுள்ளது.
 
31 வயதான  அவர் சிட்னியில் உள்ள Rooty Hill High பாடசாலையில் மனிதநேய ஆசிரியராக செயற்பட்டு வருகின்றார். 
 
அவுஸ்திரேலியா முழுவதும் அங்கீகாரம் பெற்றதுடன், நேற்றைய தினம் உலகில் சிறந்த ஆசிரியர்களில் ஒருவராக அவர் பெயரிட்ட பின்னர் இன்னும் அந்த மக்களுடன் அவர் நெருக்கமாகியுள்ளார்.
 
இந்த வருடத்தில் அவுஸ்திரேலியா சார்பில் இந்த பட்டியலில் 10 பேர்களில் ஒருவராக அவர மாத்திரமே பெயரிடப்பட்டுள்ளார்.
 
179 நாடுகளை சேர்ந்த 10,000 ஆசிரியர்களில் அவர் இந்த இடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். அத்துடன் ஒரு மில்லியன் டொலர் பணப்பரிசிற்கும் அவர் வெற்றியாளராகுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
 
"Rooty Hill High மற்றும் அவுஸ்திரேலியா முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்கு அவர் ஒரு எடுத்துக்காட்டாக மாறியுள்ளார்.
 
இலங்கையில் பிறந்த அவர் அவுஸ்திரேலியாவில் குடியேறி அங்கு பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை