விஜயகாந்த்திடம் நலம் விசாரித்த ரஜினி : நோ பாலிடிக்ஸ்

தினமலர்  தினமலர்
விஜயகாந்த்திடம் நலம் விசாரித்த ரஜினி : நோ பாலிடிக்ஸ்

சென்னை : நடிகரும், தேமுதிக., தலைவருமான விஜயகாந்த், உடல்நலக் குறைவால் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று, சமீபத்தில் சென்னை திரும்பினார். அவரை அரசியல் பிரபலங்கள் பலரும் நேரில் சந்தித்து, நலம் விசாரித்து வருகின்றனர். கூடவே பார்லிமென்ட் தேர்தலுக்கான கூட்டணி அழைப்புகளும் இந்த சந்திப்பில் அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில், சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்திற்கு, நடிகர் ரஜினிகாந்த் இன்று(பிப்., 22) காலை வந்தார். விஜயகாந்தின் உடல்நலம் குறித்து விசாரித்தார். 20 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடந்தது. விஜயகாந்த் உடன் அவரது மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ், மகன் விஜயபிரபாகரன் மற்றும் கட்சியினர் உடன் இருந்தன.

பின்னர் செய்தியாளர்களிடம் ரஜினி பேசியதாவது : விஜயகாந்திடம் உடல் நலம் விசாரிக்க வந்தேன். அமெரிக்காவிலேயே அவரை சந்திக்க முயற்சித்தேன், முடியவில்லை. நான் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது, என்னை பார்க்க வந்த முதல் நபர் விஜயகாந்த் தான். தற்போது சிகிச்சை முடிந்து நல்ல ஆரோக்யத்துடன் விஜயகாந்த் திரும்பி வந்துள்ளார். நல்ல மனிதர், அவர் எப்போதும் நல் ஆரோக்யத்துடன் இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன். இது அரசியல் ரீதியான சந்திப்பு இல்லை. பார்லிமென்ட் தேர்தலில் எனது நிலைப்பாட்டை ஏற்கனவே அறிவித்துவிட்டேன் என்றார்.

மூலக்கதை