விஜயகாந்த் உடனான சந்திப்பில் துளியும் அரசியல் இல்லை : நடிகர் ரஜினிகாந்த் விளக்கம்

தினகரன்  தினகரன்
விஜயகாந்த் உடனான சந்திப்பில் துளியும் அரசியல் இல்லை : நடிகர் ரஜினிகாந்த் விளக்கம்

சென்னை : விஜயகாந்த் உடனான சந்திப்பில் துளியும் அரசியல் இல்லை என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்திற்கு சென்று நடிகர் ரஜினிகாந்த் சந்தித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், விஜயகாந்தின் உடல்நலம் குறித்து விசாரித்ததாகவும், சிகிச்சைக்கு பின் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளார் என்றும் கூறியுள்ளார். மேலும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது என்னை வந்து சந்தித்த முதல் நபர் விஜயகாந்த், அவர் எப்போதும் நலமுடன் இருக்க வேண்டுமென பிரார்த்திக்கிறேன் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

மூலக்கதை