150 மில்லியன் டாலர் சொத்துக்களை கொண்ட பணக்கார பூனை

தினகரன்  தினகரன்
150 மில்லியன் டாலர் சொத்துக்களை கொண்ட பணக்கார பூனை

பாரிஸ் : உலகின் மிகப்பெரிய ஆடை வடிவைப்பாளர்களில் ஒருவரான ஜெர்மெனியை சேர்ந்த கார்ல் லாகர்ஃபீல்ட் வயது (85) இவர் உடல்நல குறைவு காரணமாக கடந்த செவ்வாய் கிழமை உயிரிழந்தார். இவரது மறைவு மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இவர் சௌபெட்(Choupette ) என்ற பூனையை செல்லமாக வளர்த்து வந்தார். சௌபெட்டை பராமரிக்க வேலைக்காரர்களும் உள்ளனர். அந்த அளவிற்கு சௌபெட் ஒரு ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்து வந்தது.  அந்த பூனை என்றால் கார்ல் லாகர்ஃபீல்ட்க்கு உயிர். எந்த நேரமும் தன் பூனையுடனே சுற்றுத்திரிவார். சட்டம் சம்மதித்தால் தனது பூனையை திருமணம் செய்து கொள்வேன் என்றெல்லாம் கூறியிருந்தார். இந்நிலையில் அவர் மறைவிற்கு முன்னர் தனது பூனையின் பெயரில் 150 மில்லியன் டாலர் மதிப்பிலான சொத்தை எழுதி வைத்துவிட்டு, அதற்கு கார்டியன்களையும் நியமித்துவிட்டு இறந்துள்ளார்.

மூலக்கதை