பல்லுயிர் சூழல் பாதிப்பு வருங்கால உணவு உற்பத்திக்கு மிகப்பெரும் அச்சுறுத்தல்: ஐநா ஆய்வறிக்கையில் தகவல்

தினகரன்  தினகரன்
பல்லுயிர் சூழல் பாதிப்பு வருங்கால உணவு உற்பத்திக்கு மிகப்பெரும் அச்சுறுத்தல்: ஐநா ஆய்வறிக்கையில் தகவல்

கலிபோர்னியா: பல்லுயிர் சூழல் பாதிப்பு வருங்கால உணவு உற்பத்திக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது என்று ஐநா ஆய்வறிக்கை ஒன்று எச்சரித்துள்ளது. உணவு உறபத்திக்கான பல்லுயிர் சூழல் குறித்து ஐநா உணவு மற்றும் வேளாண் அமைப்பு 91 நாடுகளில் முதன்முறையாக ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.உணவு உற்பத்திக்கு உதவும் சிறு, குறு உயிர்கள் குறைந்து வருவது குறித்து அதில் வருத்தம் தெரிவித்துள்ளது. பல்லுயிர் சூழல் பாதிப்பு மற்றும் விவசாய பயிர்களில் நோய் மற்றும் பூச்சி தாக்குதலை அதிகரித்து உணவு உற்பத்தியை குறைக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றம், மாசு, நீர் மற்றும் நில மேலாண்மைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், மக்கள் தொகை பெருக்கம் உள்ளிட்டவை பல்லுயிர் சூழல் பாதிப்புக்கு காரணமாக கூறப்படுகிறது.மக்கள் தொகை பெருகி வரும் போது அதற்கு ஏற்ப உணவு உற்பத்தி செய்ய வேண்டிய நிலையில் இயற்கைக்கு எதிரான செயல்கள் பல்லுயிர் சூழலை பாதித்து உணவு உற்பத்திக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை