தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்தார் திமுக தலைவர் ஸ்டாலின்

தினகரன்  தினகரன்
தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்தார் திமுக தலைவர் ஸ்டாலின்

சென்னை : தேமுதிக தலைவர் விஜயகாந்தை  அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தார் திமுக தலைவர் ஸ்டாலின். அண்மையில் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பிய விஜயகாந்தை அரசியல் கட்சி தலைவர்களும் , திரையுலக பிரபலங்களும் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். இன்று காலை நடிகர் ரஜினிகாந்த சந்தித்தது குறிப்பிடத்தக்கது.  மக்களவை தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் நேற்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் விஜயகாந்தை சந்தித்தார். இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் விஜயகாந்தை சந்தித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை