பிரதமர் மோடிக்கு தென்கொரிய அமைதிக்கான விருது மற்றும் 2 லட்சம் அமெரிக்க டாலர் பரிசு

தினகரன்  தினகரன்
பிரதமர் மோடிக்கு தென்கொரிய அமைதிக்கான விருது மற்றும் 2 லட்சம் அமெரிக்க டாலர் பரிசு

சியோல்: தென் கொரிய அரசின் அமைதிக்கான விருதை இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது. சியோலில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் விருதுடன் 2 லட்சம் அமெரிக்க டாலரும் மோடிக்கு பரிசாக வழங்கப்பட்டது. பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, உலக சமாதானம் மற்றும் பாதுகாப்புக்கு தீவிரவாதம், பயங்கரவாதம் ஆகியவை பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்று அவர் தெரிவித்தார். பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழிக்க அனைவரும் கைகோர்க்க வேண்டிய நேரம் வந்து விட்டதாக தெரிவித்த மோடி, மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் ஆண்டில் எனக்கு விருது வழங்கி கௌரவித்துள்ளனர் என்று மோடி தெரிவித்தார். முன்னதாக தென்கொரியாவுடன் வளர்ந்து வரும் நட்புறவில் பாதுகாப்புத்துறை முக்கிய இடம் பிடித்துள்ளதாக தென்கொரிய தலைநகர் சியோலில் நடைபெற்ற நிகழச்சியில் பிரதமர் மோடி தெரிவித்தார். தென்கொரிய தொழில்நுட்பத்தில் உருவான கே-9 வஜ்ரா பீரங்கி இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளதே இதற்கு சான்று என்று மோடி தெரிவித்தார். மேலும் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பாக இந்தியா - தென் கொரியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த தென்கொரிய அதிபருக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் அழைப்பைத் தொடர்ந்து, பிரதமர் மோடி 2 நாள் பயணமாக அந்நாட்டுக்கு நேற்று சென்றார். தலைநகர் சியோல் விமான நிலையத்தில், அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தென் கொரிய அரசின் அமைதிக்கான விருதை இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது. பின்னர் பேசிய மோடி தென்கொரிய அரசு வழங்கியுள்ள விருது இந்திய மக்களுக்கு சொந்தமானது என்று தெரிவித்தார். 130 கோடி மக்களின் திறமை இந்தியாவின் சாதனைக்கு காரணம் என்று பெருமையுடன் தெரிவித்தார். கங்கை நதியை தூய்மைபடுத்தும் திட்டத்திற்கு பரிசு தொகையான ரூ.14 கோடி பயன்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

மூலக்கதை