உத்திரபிரதேசத்தில் தனியார் அடகு கடையில் ரூ.4.5 கோடி மதிப்பிலான தங்கம் கொள்ளை: மர்மநபர்கள் கைவரிசை

தினகரன்  தினகரன்
உத்திரபிரதேசத்தில் தனியார் அடகு கடையில் ரூ.4.5 கோடி மதிப்பிலான தங்கம் கொள்ளை: மர்மநபர்கள் கைவரிசை

மீரட்: உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் மணப்புரம் கோல்டு பைனான்ஸ் நிறுவனத்தில் சுமார் 4.5 கோடி ரூபாய் மதிப்பிலான அடகு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. லால்குர்தி காவல் நிலைய எல்லைக்கு உட்பட இடத்தில் இயங்கி வந்த அந்த நிறுவனத்தின் கிளையில் நகை அடகு வைப்பது போல் வந்த மர்ம நபர்கள் 2 பேர், பணியில் இருந்த ஊழியர்களை ஆயுதங்களை காட்டியும், துப்பாக்கி முனையில் மிரட்டியும் நகைகளை கொள்ளையடித்ததாக கூறப்படுகிறது. பின்பு லாக்கரில் இருந்த சுமார் 4.5 கோடி ரூபாய் மதிப்பிலான 15 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக பேசிய மீரட் எஸ்.பி. அகிலேஷ் நாராயண் சிங், கொள்ளையர்கள் ஊழியர்களை துப்பாக்கி முனையில் மிரட்டியது மற்றும் ஆயுதங்கள் மூலமாக தாக்கிய சம்பவங்கள் அனைத்து சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ ஆதாரங்களை கொண்டு மர்ம நபர்களை தேடும் பணிகள் துவக்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும் கொள்ளையடிக்கப்பட்ட 15 கிலோ தங்க நகைகள், ரூ.4.5 கோடி மதிப்புடையதாக இருக்கலாம் என்று கூறிய அவர், தங்கத்தின் தற்போதைய விகிதத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்டு விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் எனக் கூறியுள்ளார். மேலும் கொள்ளை சம்பவம் நடந்த இடத்தில் இருந்த, பெண் ஊழியர்கள் உட்பட 4 ஊழியர்களிடமும் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தார். இதையடுத்து, மர்மநபர்கள் வந்த இரு சக்கர வாகனத்தை கொள்ளை நடந்த இடத்திலேயே விட்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இது சம்பவம் குறித்து அடகு கடை ஊழியர்கள் கூயாவது: 2 மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் தங்களை மிரட்டியதாகவும், மேலும் உயர் அதிகாரியை தாக்கி நகைகளை கொடுக்குமாறு மிரட்டியதாகவும் கூறியுள்ளனர். இந்த அனைத்து ஆதாரங்களையும் வைத்து மர்மநபர்களை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

மூலக்கதை