புதிய இந்தியா திட்டம் மூலம் அனில் அம்பானிக்கு 30,000 கோடி பரிசு: மோடி மீது ராகுல் பாய்ச்சல்

தினகரன்  தினகரன்
புதிய இந்தியா திட்டம் மூலம் அனில் அம்பானிக்கு 30,000 கோடி பரிசு: மோடி மீது ராகுல் பாய்ச்சல்

புதுடெல்லி: புதிய இந்தியா திட்டம் மூலம் தொழிலதிபர் அனில் அம்பானிக்கு 30,000 கோடியை பிரதமர் மோடி பரிசாக வழங்கி உள்ளதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். கடந்த 14ம் தேதி காஷ்மீரின் புல்வாமா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில், நேற்று முன்தினம் எரிக்சன் நிறுவனம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் அதிபர் அனில் அம்பானியை குற்றவாளி என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்புபடுத்தி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘புல்வாமா தாக்குதலில் கொல்லப்பட்ட 40 வீரர்களுக்கு தியாகிகள் என்ற அந்தஸ்து வழங்க மோடி அரசு மறுக்கிறது. இதனால், உயிரிழந்த வீரர்கள் குடும்பத்தின் வாழ்க்கை போராட்டமாக மாறியுள்ளது. அதே நேரத்தில் புதிய இந்தியா’ திட்டத்தின் மூலம் ஒரு தொழிலதிபருக்கு மோடி 30,000 கோடியை பரிசாக வழங்கியுள்ளார். இதன் மூலம், அவரது காலத்திற்கு பின்னும் அந்த குடும்பம் மகிழ்ச்சியாக வாழ முடியும். இதை வழங்கிய மோடியின் புதிய இந்தியா திட்டத்தை வரவேற்கிறேன்’ என கூறியுள்ளார்.

மூலக்கதை