காஷ்மீர் எல்லையில் 3வது நாளாக பாக்.தாக்குதல்

தினகரன்  தினகரன்
காஷ்மீர் எல்லையில் 3வது நாளாக பாக்.தாக்குதல்

ஜம்மு: பாகிஸ்தான் ராணுவம் போர் ஒப்பந்தத்தை மீறி அடிக்கடி இந்தியாவின் எல்லைப்பகுதியில் தாக்குதல் நடத்தி வருகிறது. 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த ஆண்டு பாகிஸ்தான் ராணுவம் அதிகபட்சமாக 2936 முறை அத்துமீறி இந்திய எல்லையில் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த நிலையில் கடந்த செவ்வாய்கிழமை காஷ்மீரின் ரஜோவ்ரி மாவட்டம் நவ்ஷேராவை ஒட்டிய  எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலை நடத்தியது. மறுநாளும் அதே மாவட்டத்தின் கலால் செக்டர் பகுதியில் சிறுரக பீரங்கி, துப்பாக்கியால் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில் நேற்று 3வது நாளாக முக்கிய நிலைகள் மற்றும் குடியிருப்பு பகுதியை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. பூஞ்ச் செக்டாரில் அதிகாலை 1 மணியளவில் நடந்த தாக்குதலில் சிறுபீரங்கி மற்றும் துப்பாக்கி குண்டுகளால் தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது. கடந்த 24 மணிநேரத்தில் ரஜோவ்ரி, பூஞ்ச் மாவட்டத்தில் 5 முறை பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.

மூலக்கதை