முதல்முறையாக...

தினகரன்  தினகரன்
முதல்முறையாக...

* முதல் தர டி 20  போட்டியில்  எஸ்.கார்த்திக், டி.ரோகித்,  வி.மாரிமுத்து, பி.தாமரைகண்ணன், எஸ்.சந்தோஷ்குமரன், ஏ.அரவிந்தராஜ் ஆகியேர் களமிறங்கினர். தாமரைகண்ணன் முதல் போட்டியிலேயே 4 விக்ெகட்களை எடுத்து அசத்தியுள்ளார்.* தமிழக அணியில் சி.ஹரிநிஷாந்த், ஆர். விவேக் ஆகியோர் முதல் முறையாக முதல்தர டி20 போட்டியில் விளையாடியுள்ளனர்.* தமிழக அணி வீரர் விஜய் சங்கர் இந்திய அணியில் இடம்  பெற்றதாலும்,  டி.நடராஜன், வி.அதிசயராஜ் டேவிட்சன் ஆகியோர் காயமடைந்ததாலும்  எஸ்.அனிருதா,  ரோகித் ராமலிங்கம்,  கே.விக்னேஷ் ஆகியோர் அணியில் இடம் பெற்றனர். இவர்களில் ரோகித்துக்கு மட்டும் ஆடும் அணியில் இடம் கிடைத்தது.* முஷ்டாக் அலி கோப்பை போட்டியில் ஜார்க்கண்ட் அணி டெல்லி அணியையும், ஜம்மு காஷ்மீர் அணி நாகலாந்து அணியையும் வீழ்த்தின.* கர்நாடகா அணி  அசாம் அணியையும், சட்டீஸ்கர் அணி ஒரிசா அணியையும்,  மகாராஷ்டிரா அணி உத்தரபிரதேச அணியையும் வெற்றிப் பெற்றன.* ரயில்வே அணி சவுராஷ்டிரா அணியையும், குஜராத் அணி மேகலாயா அணியையும் வென்றன.* நட்சரத்திர வீரர் சித்தேஷ்வர் புஜாரா.  டி20 போட்டியில் தனது முதல் சதத்தை எடுத்துள்ளார். அவர் ஆட்டமிழக்காமல் 61 பந்துகளில்  14 பவுண்டரிகள், ஒரு சிக்சர் அடித்து சதத்தை எட்டினார். நேற்று சவுராஷ்டிரா அணிக்காக விளையாடிய அவர் ரயில்வே அணிக்காக எதிராக இந்த சாதனையை படைத்துள்ளார். ஆனால் போட்டியில் ரயில்வே 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.  டிசம்பர் மாதம் நடந்த ஐபிஎல் ஏலத்தில் புஜாரா ஏலம் போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை