விளையாட்டு வீரர்களுக்கு உதவித் தொகை மார்ச் 12ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

தினகரன்  தினகரன்
விளையாட்டு வீரர்களுக்கு உதவித் தொகை மார்ச் 12ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

சென்னை: இந்திய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற பள்ளி, கல்லூரி மாணவர்கள் விளையாட்டு வீரர்களுக்கான ஊக்க உதவித் தொகை பெற மார்ச் 12ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது குறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் உள்ள உயர்நிலை, மேனிலைப்பள்ளிகளில், கல்லூரிகளில் படிக்கும் தலை சிறந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு தமிழக அரசு ஊக்க உதவித் தொகை வழங்கி வருகிறது. சம்பந்தப்பட்ட மாணவர்கள், மாணவிகள் இந்திய அளவிலான தனிநபர் போட்டியில் முதல் 3 இடங்களிலும், குழுப் போட்டியாக இருந்தால் முதல் 2 இடங்களிலும் வென்றவர்கள் மட்டுமே இந்த உதவித் தொகை பெற தகுதியானவர்கள். இந்தப் போட்டிகள் அனைத்தும் 1-7-2017 முதல் 30-6-2018ம் தேதிக்குள் நடைப்பெற்றிருக்க வேண்டும். தகுதியுள்ள பள்ளி மாணவ,மாணவிகளுக்கு ஆண்டுக்கு தலா 10 ஆயிரம் ரூபாயும், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுக்கு தலா 13 ஆயிரம் ரூபாயும் ஊக்க உதவித் தொகையாக வழங்கப்படும். ஒருவர் ஒரு விளையாட்டின் கீழ் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மேலும் தகவல் அறியவும், விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யவும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும். தலைமை அலுவலகத்தின் 044-28364322 என்ற தொலைபேசி எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் 12-3-2019.

மூலக்கதை