ஒருநாள் கிரிக்கெட் அணிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு!

PARIS TAMIL  PARIS TAMIL
ஒருநாள் கிரிக்கெட் அணிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு!

சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள, ஒருநாள் கிரிக்கெட் அணிகளின் தரவரிசைப் பட்டியலில் பல மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.
 
வாரந்தோறும் சிறப்பாக விளையாடும் அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டு வருகிறது.
 
அதன்படி, இந்த வாரத்திற்கான ஒருநாள் கிரிக்கெட் அணிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
 
இதில் முதல் பத்து இடங்களில் உள்ள அணிகளின் விபரங்களை தற்போது பார்க்கலாம்,
 
இதில், இங்கிலாந்து கிரிக்கெட் அணி 126 மதீப்பிட்டு புள்ளிகளுடன் முதலாவது இடத்தில் உள்ளது.
 
இந்தியக் கிரிக்கெட் அணி, 122 மதீப்பிட்டு புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
 
இதனைதொடர்ந்து, நியூஸிலாந்து கிரிக்கெட் அணி, மதீப்பிட்டு 112 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
 
பங்காதேஷ் கிரிக்கெட் அணிக்கெதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியதையடுத்து, நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இந்த ஏற்றத்தைக் கண்டுள்ளது.
 
தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி 111 மதீப்பிட்டு புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 102 மதீப்பிட்டு புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளன.
 
அவுஸ்ரேலியா கிரிக்கெட் அணி, 100 மதீப்பிட்டு புள்ளிகளுடன் ஆறாவது இடத்திலும், பங்களாதேஷ் கிரிக்கெட் அணி 90 மதீப்பிட்டு புள்ளிகளுடன் ஏழாவது இடத்திலும், இலங்கை கிரிக்கெட் அணி, 78 மதீப்பிட்டு புள்ளிகளுடன் எட்டாவது இடத்திலும் உள்ளன.
 
இதனையடுத்து, விண்டிஸ் கிரிக்கெட் அணி 72 மதீப்பிட்டு புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்திலும், ஆப்கானிஸ்தான் அணி 67 மதீப்பிட்டு புள்ளிகளுடன் பத்தாவது இடத்திலும் உள்ளன.

மூலக்கதை