அன்னிய நேரடி முதலீடு ரூ.2 லட்சம் கோடியாக சரிவு

தினமலர்  தினமலர்
அன்னிய நேரடி முதலீடு ரூ.2 லட்சம் கோடியாக சரிவு

புதுடில்லி : நடப்பு, 2018- – 19ம் நிதியாண்டின், ஏப்ரல் – டிசம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில், அன்னிய நேரடி முதலீடு, 7 சதவீதம் சரிவடைந்து, 3,349 கோடி டாலராக, அதாவது, 2.34 லட்சம் கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.

இது, 2017 –- 18ம் நிதியாண்டில், 3,594 கோடி டாலர், அதாவது, 2.48 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. மதிப்பீட்டு காலத்தில், சேவைகள் துறை அதிகபட்சமாக, 591 கோடி டாலர் முதலீட்டை ஈர்த்துள்ளது.அடுத்து, கணினி சாப்ட்வேர், ஹார்டுவேர், 475 கோடி டாலர்; தொலை தொடர்பு, 229 கோடி டாலர்; வர்த்தகம், 233 கோடி டாலர்; ரசாயனம், 605 கோடி டாலர்; வாகனம், 181 கோடி டாலருடன் இடம் பெற்றுள்ளன.

அன்னிய நேரடி முதலீடுகளை அதிக அளவில் மேற்கொண்ட நாடுகளில், சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடங்களில், மொரீஷியஸ், நெதர்லாந்து, ஜப்பான், அமெரிக்கா, பிரிட்டன் ஆகியவை உள்ளன.

அன்னிய நேரடி முதலீடு குறைந்தால், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிக்கும். மேலும், அன்னிய செலாவணிக்கு நிகரான ரூபாய் மதிப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

மூலக்கதை