வாழும் கிராவீரமரணம் அடைந்த ராணுவ வீரர்கள் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்கிறேன் - கிரிக்கெட் வீரர் ஷேவாக் அறிவிப்பு!வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்கள் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்கிறேன் - கிரிக்கெட் வீரர் ஷேவாக் அறிவிப்பு!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களது குழந்தைகளின் கல்வி செலவு முழுவதையும் ஏற்றுக்கொள்வதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேவாக் தெரிவித்து உள்ளார். 

காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு விளையாட்டு பிரபலங்கள் ஆதரவுக்கரம் நீட்டி வருகிறார்கள்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேவாக் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘உயிர்த்தியாகம் செய்த இந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு நாம் எது செய்தாலும் போதுமானதாக இருக்காது. ஆனால் குறைந்தது என்னால் முடிந்த உதவியாக வீரமரணம் அடைந்த வீரர்களது குழந்தைகளின் கல்விச் செலவு முழுவதையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். அவர்களை எனது பெயரில் உள்ள ‘ஷேவாக் சர்வதேச பள்ளி’யில் படிக்க வைக்கிறேன்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

இரானி கோப்பையை வென்றதன் மூலம் கிடைத்த பரிசுத்தொகையை, தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்குவதாக விதர்பா அணியின் கேப்டன் பைஸ் பாசல் அறிவித்து இருக்கிறார். 

இதே போல் அரியானா காவல்துறையில் பணியாற்றும் இந்திய குத்துச்சண்டை வீரர் விஜேந்தர்சிங் தனது ஒரு மாத ஊதியத்தை வழங்குவதாகவும், இதே போல் ஒவ்வொருவரும் ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு உதவ முன்வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு உள்ளார்.

மூலக்கதை