புதுச்சேரியில் என்ஆர்.காங். போட்டி: அதிமுக, பாஜ விரக்தி

தமிழ் முரசு  தமிழ் முரசு
புதுச்சேரியில் என்ஆர்.காங். போட்டி: அதிமுக, பாஜ விரக்தி

புதுச்சேரி: தமிழகத்தில் அதிமுக தலைமையிலான அணியில் பாமக7, பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தேமுதிக மற்றும் சிறிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றன.

புதுவையில் தேஜ கூட்டணியில் என்ஆர் காங்கிரஸ் இருப்பதை ரங்கசாமி உறுதிபடுத்தி இருந்தார். கடந்த வாரம் சென்னை சென்ற அக்கட்சியின் நிறுவனர் ரங்கசாமி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். அப்போது புதுச்சேரியில் தேஜ கூட்டணியில் தங்களுக்கு சீட்டை ஒதுக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

இதற்கு அதிமுக, பாஜக, பாமக தலைமை ஒப்புதல் தெரிவித்து விட்டது. இருப்பினும் புதுச்சேரியில் பாஜகவின் வாக்கு வங்கி தற்போது அதிகரித்து இருப்பதாகவும், எனவே இத்தொகுதியில் பாஜக போட்டியிட வேண்டுமென அக்கட்சியின் மாநில நிர்வாகிகள் கட்சித் தலைமையை வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக நேற்று மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் சென்னை சென்று, கட்சியின் மேலிட பொறுப்பாளரான மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்து பேசினர்.

ஆனால் புதுச்சேரி தொகுதியை என்ஆர் காங்கிரசுக்கு ஒதுக்க முடிவு செய்யப்பட்டு விட்டதை பாஜக தலைமை உறுதி செய்துவிட்டதாக கூறியதால் ஏமாற்றத்துடன் திரும்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தாமரை சின்னத்தில் ரங்கசாமி கட்சியை போட்டியிட வற்புறுத்த வேண்டுமென்ற கோரிக்கையும் நிறைவேறவில்லை. இதேபோல் புதுச்சேரி அதிமுக நிர்வாகிகளும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து தனது கட்சித் தலைமையிடம் விருப்ப மனுக்களை அளித்திருந்தனர்.

தற்போது அவர்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது.

.

மூலக்கதை