அதிமுகவுடன் பாமக கூட்டணி: தம்பிதுரை புது விளக்கம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
அதிமுகவுடன் பாமக கூட்டணி: தம்பிதுரை புது விளக்கம்

கரூர்: பாமகவுடன் அதிமுக கூட்டணி வைத்தது ஏன் என்று நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை விளக்கம் அளித்துள்ளார். கரூர் ஜங்ஷன் முதல் தேசிய நெடுஞ்சாலை வரையிலான இணைப்பு சாலை பணி துவக்க விழா  நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரையிடம்,  ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்டக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்த பாமகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளதே என்றனர். இதற்கு தம்பிதுரை கூறும்போது, ‘‘ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிலைப்பாடு உண்டு.

தேர்தல் கூட்டணி என்பது எதிரியை வீழ்த்துவதற்காக அமைக்கப்படுவது.

ஏற்கனவே பாமக, அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த கட்சி தான்’’ என்றார்.

.

மூலக்கதை