2019 IPL போட்டி அட்டவணை வெளியீடு!

PARIS TAMIL  PARIS TAMIL
2019 IPL போட்டி அட்டவணை வெளியீடு!

 

2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள IPL போட்டிக்கான முதல் கட்ட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
 
பிசிசிஐ யினால் நேற்று (19) இந்த போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மார்ச் 23ஆம் திகதி முதல் ஏப்ரல் 5 ஆம் திகதி வரை போட்டிகள் நடைபெறவுள்ளன.
 
சென்னையில் மார்ச் 23-ம் திகதி மாலை நடைபெறவுள்ள முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து ஹோலி தலைமையிலான பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் அணி விளையாடவுள்ளது.
 
இந்த வருட ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ரோயல் சலஞ்சர்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், டெல்லி கேபிடல்ஸ் (டேர்டெவில்ஸ் பெயர்மாற்றம்). மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ்லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ரோயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.
 
அனைத்து அணிகளும் குறைந்தபட்சம் 4 போட்டிகளில் விளையாடுகின்றன. இதில் டெல்லி கேபிடல்ஸ், ஆர்சிபி அணிகள் மாத்திரம் 5 போட்டிகளில் விளையாடுகின்றன.
 
ஒவ்வொரு அணியும் 2 போட்டிகளை சொந்த மாநிலத்திலும், 2 போட்டிகளை வெளி மாநிலத்திலும் விளையாடுகின்றன.
 
 

 

மூலக்கதை