ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுடன் விளையாடுவது பற்றி மத்திய அரசே முடிவு செய்யும் : பிசிசிஐ தகவல்

தினகரன்  தினகரன்
ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுடன் விளையாடுவது பற்றி மத்திய அரசே முடிவு செய்யும் : பிசிசிஐ தகவல்

மும்பை : ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுடன் விளையாடுவது பற்றி மத்திய அரசே முடிவு செய்யும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ தெரிவித்துள்ளது. புல்வாமா தாக்குதலால் பாகிஸ்தான் அணியுடன் இந்தியா வெளியாடுவதை தவிர்க்க பல தரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் பிசிசிஐ இவ்வாறு கூறியுள்ளது.உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி2019-ம் ஆண்டுக்கான 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே மாதம் 30-ம் தேதி தொடங்குகிறது. 2019-ம் ஆண்டுக்கான உலகக்கோப்பை போட்டிகள் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற உள்ளது. இந்தத் தொடர் மே மாதம் 30-ம் தேதி தொடங்கி ஜூன் 14-ம் தேதி வரை நடக்க உள்ளது, ஜூன் 16-ம் தேதி இந்திய அணி, பாகிஸ்தான் அணியுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது. பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி விளையாடுவதை தவிர்க்க கோரிக்கை இந்நிலையில் புல்வாமா தாக்குதலின் எதிரொலியால் பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி உலகக்கோப்பை போட்டியில் விளையாடக் கூடாது என்ற கருத்து வலுத்து வருகிறது. ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி தற்கொலைப்படைத் தீவிரவாதிகள் நிகழ்த்திய வெடிகொண்டு தாக்குதலில் 44-க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எப் ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.பல தரப்பில் இருந்தும் வலுக்கும் கோரிக்கைகள் புல்வாமா தாக்குதலின் எதிரொலியால், நாட்டின் மதிப்பு மிக்க கிரிக்கெட் கிளப் ஆப் இந்தியா அமைப்பு மொஹாலியில் நினைவுகளாக வைத்திருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் மைதானம் மற்றும் முன்னாள் கேப்டன் இம்ரான் கானின் புகைப்படங்களை உடனடியாக அகற்றியது. அத்துடன், உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியை இந்திய அணி புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.அதேபோல், மத்திய அரசு அனுமதி அளிக்காத வரை நாங்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் எந்தவொரு நேரடி போட்டி தொடரிலும் விளையாட மாட்டோம் என்று ஐ.பி.எல் தலைவர் ராஜீவ் சுக்லா கூறியுள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கும், உலகக்கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாடக் கூடாது என்ற கருத்தைக் கூறியுள்ளார்.இந்நிலையில், பிசிசிஐ முன்னாள் செயலாளர் சஞ்சய் பட்டேல், “கோழைத்தனமான தாக்குதலில் நம்முடையை ஏராளமான சகோதரர்களை இழந்திருக்கிறோம். இந்தச் சூழலில் பாகிஸ்தானுடன் இந்தியா எப்படி விளையாட நினைக்க முடியும். என்னுடைய பார்வையில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக் கூடாது. ஒரு வேளை விளையாடினால் நாட்டை விட கிரிக்கெட்தான் பெரிது என்றாகிவிடும்,” என தெரிவித்தார்.அனைத்துப் போட்டிகளும் திட்டமிட்டப்படியே நடைபெறும் : ஐசிசி திட்டவட்டம் இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தலைமை செயல் அதிகாரி டேவ் ரிச்சர்ட்சன் கூறியதாவது:\'புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவரது மனநிலை பற்றிய எண்ணங்கள் தான் எங்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது. மக்களை அல்லது சமூகத்தை  ஒன்றிணைப்பதில் கிரிக்கெட் முக்கிய பங்கு வகிக்கிறது.உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அனைத்துப் போட்டிகளும் திட்டமிட்டப்படியே நடைபெறும். அதில் எந்தவித மாற்றமும் இல்லை. முன்னதாக, 1999ம் ஆண்டு கார்கில் போர் நடைபெற்றப் போது, இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பையில் இந்தியா, பாகிஸ்தானுடன் விளையாடியது. இதனால், ஜூன் 16ம் தேதி மான்செஸ்டரில் இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையேயான உலக கோப்பை போட்டி திட்டமிட்டப்படி நடைபெறும்\' என்று   தெரிவித்தார்.இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ கருத்துஇந்நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ தனது கருத்தை தெரிவித்துள்ளது. அந்த கருத்துக்கள் பின்வருமாறு :*ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுடன் விளையாடுவது பற்றி மத்திய அரசே முடிவு செய்யும். *உலகக்கோப்பை அட்டவணையில் மாற்றம் செய்வது தொடர்பாக ஐசிசியை அணுகவில்லை. *பாகிஸ்தான் அணியுடன் இந்தியா விளையாடுவதை தவிர்த்தால் புள்ளிகளை இழக்க நேரிடும்.*இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் வந்து நாம் விளையாடாவிட்டால் இந்தியா கோப்பையை இழக்க நேரிடும் *இந்தியா பாகிஸ்தான் போட்டி அட்டவணையில் எந்த மாற்றமும் இல்லை என் ஐசிசி கூறியுள்ளது.இவ்வாறு பிசிசிஐ தெரிவித்தது.

மூலக்கதை