குஜராத்திலிருந்து கடத்தி வந்து தமிழகம் முழுவதும் சப்ளை பூந்தமல்லியில் 5 டன் குட்கா பறிமுதல்: 2 பேர் கைது; 2 ேவன், மினி லாரி பறிமுதல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
குஜராத்திலிருந்து கடத்தி வந்து தமிழகம் முழுவதும் சப்ளை பூந்தமல்லியில் 5 டன் குட்கா பறிமுதல்: 2 பேர் கைது; 2 ேவன், மினி லாரி பறிமுதல்

பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை பாரிவாக்கம் சந்திப்பில் 2 வேன்களில் இருந்து, தடை செய்யப்பட்ட குட்காவை வேறு வாகனத்திற்கு மாற்றி கொண்டிருப்பதாக பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

போலீசாரை பார்த்ததும், வேனை இயக்கி கொண்டு மர்ம கும்பல் தப்ப முயன்றது. அவர்களை போலீசார் மடக்கி பிடித்து, வேனில் சோதனையிட்டனர்.

அப்போது 2 வேனில் 5 டன் எடையுள்ள 70 மூட்டைகளில் குட்கா, மாவா தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

இது தொடர்பாக வேன் டிரைவர்களான குஜராத்தை சேர்ந்த ஜோதிந்திர தேவ் (44), மிசான் பாவேஸ்தான் (35) ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில் குஜராத்திலிருந்து குட்கா போன்ற போதை பொருட்களை கடத்தி வந்து தமிழகம் முழுவதும் சப்ளை செய்வதாகவும், குடோனில் பதுக்கி வைத்தால் போலீசார் கண்டுபிடித்து விடுவதால், வேன் அல்லது லாரியிலேயே சுற்றி வந்து, வேறு வாகனங்களில் மாற்றி விட்டு சென்று விடுவதாகவும் தெரிந்தது.

இதைத்தொடர்ந்து 2 வேன் மற்றும் ஒரு மினி லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தப்பி ஓடிய மினி லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

.

மூலக்கதை