தொடர்ந்து உச்சத்தில் இருக்கும் ஆபரண தங்கத்தின் விலை: ஒரு சவரன் 26 ஆயிரத்தை எட்டியது!

தினகரன்  தினகரன்
தொடர்ந்து உச்சத்தில் இருக்கும் ஆபரண தங்கத்தின் விலை: ஒரு சவரன் 26 ஆயிரத்தை எட்டியது!

சென்னை: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 26,000 ரூபாயை நெருங்கியது. 22 கேரட் ஆபரண தங்கம் இதுவரை இல்லாத அளவில் ஒரு கிராம் 19 ரூபாய் அதிகரித்து ரூ.3,230க்கும், 1 சவரன் 152 ரூபாய் விலை உயர்ந்து ரூ.25,840 க்கும் விற்கப்படுகிறது. சென்னையில் கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலையில் ஏற்றம் நிலவி வருகிறது. இதுவரை இல்லாத வகையில், ஒரு சவரன் தங்கம் விலை ரூ.25 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை சென்னையில் 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.25,688-க்கு விற்கப்பட்டது. இந்நிலையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 ரூபாய் அதிகரித்து ரூ. 25,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி, 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமுக்கு 3,358 ரூபாய் எனவும், 8 கிராம் 26,864 ரூபாயாகவும் விற்பனையானது. இன்றைய நிலவரப்படி, தூய தங்கத்தின் விலையும் சவரனுக்கு 152 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. சென்னையில் 24 கேரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3,377ஆகவும், சவரனுக்கு ரூ. 27,016-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோன்று வெள்ளியின் விலை கிராமுக்கு 40 காசுகள் உயர்ந்து 44 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்த ஆண்டில் மட்டும் தங்க விலை 3.3 சதவீத வரை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தங்கம் மீதான தேவை அதிகரித்திருப்பதால் உள்ளுர் நகைக்கடைக்காரர்கள் அதிகளவில் தங்கத்தை வாங்கி வருகின்றனர். மறுபக்கம் ரூபாய் மதிப்பு சரிவு, கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்றவையும் தங்கம் விலை உயர்வதற்கான முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது.

மூலக்கதை