புல்வாமா தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் ஆதாரங்களை கேட்பது வேடிக்கையாக உள்ளது: நிர்மலா சீதாராமன்

தினகரன்  தினகரன்
புல்வாமா தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் ஆதாரங்களை கேட்பது வேடிக்கையாக உள்ளது: நிர்மலா சீதாராமன்

டெல்லி: பயங்கரவாதிகள் மீண்டும் ஒரு முறை பாதுகாப்பு படை மீது தாக்குதல் நடத்தாத வண்ணம் நடவடிக்கை எடுத்து வருவதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி 14-ம் தேதி காஸ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு பல்வேறு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன.இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புல்வாமா தாக்குதலால் மக்கள் அடைந்துள்ள கோபத்தை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை என்றார். பயங்கரவாதிகளுக்கு பதிலடி எப்போது, எப்படி, எங்கு என்பதை ராணுவமே முடிவு செய்யலாம் என்று அவர் குறிப்பிட்டார். மும்பை தாக்குதல் தொடர்பாக பல முறை ஆதாரங்களை கொடுத்தும் ஒன்றுமே செய்யாத பாகிஸ்தான் இப்போதும் அதே போல ஆதாரங்களை கேட்பதாக அவர் கூறினார். இனிமேலும் பாகிஸ்தானுக்கு எதையும் கொடுக்க இந்தியா தயாராக இல்லை என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

மூலக்கதை