உத்தரப்பிரதேச மாநிலத்தில் லேசான நிலஅதிர்வு: ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவு

தினகரன்  தினகரன்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் லேசான நிலஅதிர்வு: ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவு

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் பகுதி அருகே நில அதிர்வு உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்களில் அதிர்வு ஏற்பட்டது. இதனால் அச்சம் அடைந்த மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி திறந்தவெளியில் தஞ்சம் புகுந்தனர். உத்தரபிரதேசத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் டெல்லியிலும் உணரப்பட்டது. மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தானில் இன்று காலை 7 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து உத்தரபிரதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க நிலநடுக்க ஆய்வு மையம் கூறியுள்ளது. யுனைடெட் ஸ்டேட்ஸ் ஜியாலஜல் சர்வே வலைத்தளத்தின்படி, இந்த பூகம்பம் உத்திரபிரதேசத்தின் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள கந்த்லா பகுதி அருகில், 10 கிமீ ஆழத்தில் நடந்ததாக கூறப்படுகிறது. எனினும், இந்தியாவின் வானியல் துறை (ஐஎம்டி) உத்திரபிரதேசத்தின் பாக்தாத்தில் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும், 6 கிமீ ஆழம் என மதிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. கந்த்லா பகுதி டெல்லி-சஹரன்பூர் நெடுஞ்சாலை நடுவில் 80 கிமீ வடக்கே அமைந்துள்ளது. அதேபோல பாக்தாத் தில்லிலிருந்து 54 கி.மீ தூரத்தில் உள்ளது. இந்த நிலஅதிர்வு காரணமாக இதுவரை எந்த ஒரு விபத்துகளும் பதிவாகவில்லை. கடந்த சில நாட்களில், ஹிமாச்சல பிரதேசம், ஜம்மு & காஷ்மீர், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் லேசான நிலஅதிர்வுகள் உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை