புல்வாமா தாக்குதலை அரங்கேற்றிய குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்...... பாகிஸ்தானுக்கு டிரம்ப் வலியுறுத்தல்

தினகரன்  தினகரன்
புல்வாமா தாக்குதலை அரங்கேற்றிய குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்...... பாகிஸ்தானுக்கு டிரம்ப் வலியுறுத்தல்

வாஷிங்டன்: புல்வாமாவில் நிகழ்த்தப்பட்ட தீவிரவாத தாக்குதலானது, அங்குள்ள பயங்கர நிலைமையை எடுத்துக் காட்டுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். பிப்ரவரி 14ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதுகுறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தீவிரவாத தாக்குதலானது இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரிக்க வழிவகுத்திருப்பதாக கூறியுள்ளார்.இந்த விவகாரத்தில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டால் சிறப்பாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். புல்வாமா தீவிரவாத தாக்குதலை ஒரு பயங்கரமான நிலைமை எனக் குறிப்பிட்டுள்ள டிரம்ப், இதுதொடர்பான நிறைய விவரங்கள் தனது கவனத்திற்கு வந்துள்ளதாகவும் கூறியுள்ளார். பிரச்சனையை சமாளிக்க சரியான நேரத்தில் அறிக்கை அளிக்கப்படும் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதேபோல் அமெரிக்க வெளியுறவுத்துறையின் இணை செய்தி தொடர்பாளரான ராபர்ட் பல்லாடினோ, தீவிரவாத தாக்குதலில் இந்தியாவுக்கு தான் தங்களது ஆதரவு என்று உறுதிபடக் கூறியுள்ளார். தீவிரவாத தாக்குதலுக்கு காரணமானவர்களை பாகிஸ்தான் தண்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மூலக்கதை